Baakiyalakshmi: ராதிகாவுடன் பாக்கியா செய்த காரியம்... கடும் எரிச்சலில் மாமியார் ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை தனது தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில், பாக்கியாவும் ராதிகாவுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் கெட்டவராக இருந்தாலும் தனது கடமையை சரியாக செய்து வருகின்றார். கோபி பாக்கியா வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது ராதிகாவையும் அழைத்து வந்துள்ளார்.
ஈஸ்வரி பாக்கியாவை மீண்டும் கோபியுடன் சேர்த்து வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதனை பாக்கியா தவிடுபொடியாக்கியுள்ளார்.
ஆம் தனது வீட்டிற்கு வந்த ராதிகாவுடன் மிகவும் அன்பாக பாக்கியா நடந்து கொண்டுள்ளார். ஆனால் கோபியிடம் இங்கு தங்கியிருப்பதற்கு வாடகை வசூலித்து மாஸ் காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |