உண்மையை கண்டறிந்த முதல் கணவர்... அமிர்தாவின் நிலை என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் முதல் கணவர் இறந்துவிட்டதாக நினைத்த நிலையில், மீண்டும் உயிருடன் வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது இனியாவை படிப்பு விடயமாக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வரும் சிக்கல்களை சாமர்த்தியமாக சமாளித்த பாக்கியா, தற்போது இனியாவை சுற்றி வளைத்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.
தற்போது அமிர்தாவின் முன்னாள் கணவர் இறந்துவிட்டதாக நினைத்த நிலையில், அவர் உயிருடன் வந்துள்ள நிலையில், அவரை எங்கே என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அமிர்தா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை அவதானித்த அவரது கணவர் அடுத்தடுத்து கேள்வி கேட்டு வருகின்றார். மற்றொரு புறம் அமிர்தா கனவில் முதல் கணவர் தன்னை துரத்துவது போன்று கண்டு பயந்து எழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |