கையும் களவுமாக சிக்கிய இனியா.. உடனே செல்போனை பிடுங்கிய பாக்கியா- பேசியது யார் தெரியுமா?
கோபியிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இனியா கையும் களவுமாக பாக்கியாவிடம் சிக்கிக் கொள்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
அதே சமயம் இயக்குனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
கையும் களவுமாக சிக்கிய இனியா
இந்த நிலையில், இனியா நைட் பார்ட்டிக்கு சென்ற விடயம் அவரின் கல்லூரி வரை செல்கிறது. இது குறித்து விசாரிப்பதற்காக கல்லூரிக்கு இனியாவின் பெற்றோர்களை அதிபர் அழைக்கிறார்.
இப்படியொரு விடயம் இருப்பதை பாக்கியாவிடம் மறைத்த இனியா, கோபியிடம் கோல் செய்து கூறுகிறார். யதார்த்தமாக இனியாவின் அறைக்குள் வந்த பாக்கியா, இனியா தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை அவதானிக்கிறார்.
அம்மாவை கண்டவுடன் ஏதோ சமாளித்து விட்டு இனியா கோலை கட் செய்கிறார்.
இது குறித்து பாக்கியா விசாரிக்க, உண்மையை கூறாமல் பயத்தில் இனியா தடுமாறுகிறார். இனியாவின் தடுமாற்றத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த பாக்கியா, மெதுவாக விசாரிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |