என்னது 108 மிஸ்டு கால்ஸா? கதிகலங்கிய கோபியின் பரிதாபநிலை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மது அருந்திவிட்டு பாக்கியா வீட்டில் தங்கியுள்ள நிலையில் ராதிகா 108 மிஸ்டு கால்ஸ் கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வந்த இனியா, ராதிகாவால் தற்கொலை வரை சென்று தற்போது பாக்கியாவுடன் வசித்து வருகின்றார்.
ராதிகா வீட்டில் கடும் தொந்தரவு கொடுப்பதால், தற்போது தினமும் கோபி மது அருந்துவிட்டு வருகின்றார். சமீபத்தில் ராதிகாவின் காலில் விழுந்து குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார் கோபி.
ஆனால் மறுநாளே கோபி குடித்துவிட்டு போதையில் பாக்கியாவின் வீட்டில் தங்கியுள்ளார். காலையில் எழுந்து அவதானித்த கோபியின் போனில் ராதிகா 108 மிஸ்டு கால்ஸ் செய்துள்ளார்.