கேன்டீனில் கண்ணீர் விட்டு கதறிய பாக்கியா... எதிர்பாராமல் நடந்த சிக்கல் என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு கௌரவத்தை கொடுத்த கேண்டினில் தவறு ஏதோ நடந்துவிட்ட நிலையில், கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்திய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சாவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதுடன், தனது மாமியாரிடமும் சம்மதம் பெற்றுள்ளார். இந்நிலையில் பழனிச்சாமியின் அம்மா அவருக்கு பாக்கியாவை திருமணம் செய்ய யோசனை செய்து வருகின்றார்.
கோபி மற்றும் ராதிகா இருவரால் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வரும் பாக்கியா தற்போது கேண்டீனில் புதிய சிக்கலை சந்திப்பதாக ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |