நீங்க திருமணம் செய்து சந்தோஷமாவா இருக்கீங்க? ராதிகாவிடம் பாக்கியா கேட்ட கேள்வி
பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியுடன் தன்னை தவறாக பேசிய கோபியை வீட்டை விட்டு பாக்கியா வெளியேற கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார். தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.
செழியனை பிரிந்து ஜெனி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மருமகளை அழைத்து வருவதற்கு பாக்கியாவும் முயற்சி செய்து வருகின்றார்.
தற்போது பாக்கியாவிற்கு சப்போட் செய்யும் விதமாக ராதிகா இருந்து வருகின்றார். இந்த கதையின் மாற்றம் ரசிகர்கள் மிகவும் பிடித்துள்ளது.
பாக்கியா பழனிச்சாமியுடன் பேசுவதை கண்டு கோபி சந்தேகப்படும் நிலையில், சண்டையும் போட்டுள்ளார். தற்போது ராதிகா பாக்கியாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார்.
இதற்கு பாக்கியா தனது பானியில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். நீங்க கல்யாணம் செய்து சந்தோஷமாவா இருக்கீங்க? என்று கேட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |