பிக் பாஸ் அல்டிமேட்டில் எலிமினேட்டானது இவரா? கேப்டனாக்கியதே தூக்கத்தானோ!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், எலிமினேட் ஆனது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் வாரத்தில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதில், ஒருவர் கூட முதல் வாரத்தில் வெளியேற மாட்டார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஒருவர் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 4ல் திடீரென வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி தாத்தா இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் நபராக எலிமினேட் ஆகி உள்ளார் என்கிற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் அவருக்கும் அபிநய்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இருவரும் 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.