அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய நிவேதிதாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அழகிய தமிழ் மகன்
விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்தது. முதன் முறையாக இப்படத்தில் தான் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறுமி ஒருவர் நடித்திருப்பார். அந்த சிறுமி இறப்பின் மூலம் விஜய்யிற்கு தனக்குள் இருக்கும் சக்தியை பற்றி தெரியவரும்.
இப்படம் வெளியாகி 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாம் குழந்தையாக பார்த்த சிறுமி நிவேதிதா தற்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
அபுதாபியைச் சேர்ந்த இவர் மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்டோரின் மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தமிழில் இவர் நடித்த ஒரே திரைப்படம் அழகிய தமிழ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிவேதிதாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |