பெண்களை அசிங்கமாக பேசிய அசீம் டைட்டில் வின்னரா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்ட அசிம் குறித்து பல சர்ச்சைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இறுதி வாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றைய தினம் முற்றுப்பெற்றது.
இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட கலந்துக் கொண்டார்கள். இதில் ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா உள்ளிட்ட போட்டியாளரகள் வெளியேறப்பட்டிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 ல் இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
பணப்பெட்டியை கைப்பற்றிய பிரபலம்
மேலும், இந்த போட்டியில் முதல் பணமூட்டை டாஸ்க் அறிமுகப்படுத்திய போது முக்கிய போட்டியாளர் கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறினார். இதில் சுமார் 3 லட்சம் பணம் இருந்துள்ளது.
அடுத்தப்படியாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது அதனை சுமார் 13 இலட்சம் பணத்துடன் அமுதவாணன் எடுத்துச் சென்றுள்ளார். பிக் பாஸ் ஃப்னலிஸ்ட் போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் போட்டியாளர்கள் தெரிவுச் செய்யப்பட்டார்கள்.
இதன்படி, இந்த சீசன் டைட்டில் வின்னராக அசீம் தெரிவுச் செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் அசீம் 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சீசன் வென்ற அசீம் ஆரம்பத்தில் பெண்களை அசிங்கமாக பேசியுள்ளார் தொடர்ந்து தன்னுடைய அடாவடி தனத்தை தொடர்ந்து வந்தார்.
சர்சையை ஏற்படுத்தும் ரசிகர்கள்
ஆனால் இவர்களில் விக்ரமன் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது, இதற்கு மாறாக அசீம் வென்ற விடயம் பல ரசிகர்ளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் வெற்றி வாகை சூடியது, மக்களுக்கு தவறான ஒருமுன்னுதாரணத்தை ஏற்படுத்தியது போன்று இருக்கிறது.
இது குறித்த ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதன்படி, “அடுத்தவர்களை அசிங்கமாக பேசுபவர் டைட்டில் வின்னராக இருக்கலாமா? என கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
Virtue won in the hearts of the people... ❤❤?? @RVikraman#BiggBossTamil6#AramVellum
— selvaa (@Selvaa6730) January 23, 2023
#Vikraman#ThozharVikraman#BoycottVijayTv#அறம்வெல்லும் pic.twitter.com/23aj5L42BK