அசீம் இவ்வளவு கேவலமானவரா? முட்டையை திருடிய குறும்படம்! கிளித்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டையிட்டு வரும் அசீம் மக்களால் முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு வருகின்றார்.
முட்டை திருடிய சம்பவம்
பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களிடம் நியாயம் என்ற வார்த்தையை கூறி வாக்குவாதம் செய்யும் அசீம் தற்போது செய்துள்ள சம்பவம் பெரும் முகம்சுழிக்க வைத்துள்ளது.
அமுதவானன் முட்டையை வாங்கிவரும் அசீம், இரண்டு முட்டை அமுதவானன் சாப்பிட்டுவிட்டதால், அதனை எடுத்துவைத்து விட்டு வருகிறேன் என்று கூறி அவருடைய முட்டை டப்பாவை எடுத்து செல்கின்றார்.
அமுதவானன் முட்டை டப்பாவுடன், தன்னுடைய முட்டை டப்பாவையும் வைத்து தனக்கு பெரிய முட்டையை மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளும் அசீம், இறுதியில் தன்னுடைய டப்பாவில் 9 முட்டைகளும், அமுதவானன் டப்பாவில் 10 முட்டைகளும் இருப்பதைக் கண்டு அதிகமாக இருப்பதாக கூறி ஒரு முட்டையை எடுத்து தன்னுடைய டப்பாவில் எடுத்து வைத்துள்ளார்.
இந்த காட்சியினை நெட்டிசன்கள் குறும்படமாக வெளியிட்டு அசீமை அசிங்கப்படுத்தி வருகின்றனர். முட்டை விவகாரத்தில் அசீம் செய்த செயல் பலரையும் முகம்சுழிக்கவே வைத்துள்ளது.
முட்டையை நாசுவாக திருடிய அஷீம்..#BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #VetriMedia #Vikraman_Army_Forever #VikramanArmy #vikraman? #azeemclown #Azeem pic.twitter.com/DtO17zoIHd
— Raj Media (@TThozha) December 6, 2022