உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? இத தடவுங்க கறுப்பாக்கிடும்!
இன்று இளம் வயதிலேயே வெள்ளை முடியை பிரச்சினைக்கு பலரும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இதை சாதாரணமாகக் கடந்து விடுவதும்..அல்லது அதை மறைக்க சாயங்கள் பூசுவதும்தான் தீர்வு என்று முடிவு செய்வது தவறு.
உங்கள் தலைமுடியில் ரசாயன அடிப்படையிலான வண்ணங்களைப் பயன்படுத்துவதில் நீங்கள் சோர்வடைந்து இயற்கையான ஒன்றை முயற்சிக்க விரும்புகிறீர்களா? நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவு உதவி புரியும்.
கருப்பு தேயிலை
வெள்ளை முடியை கருமையாக்குவதில் கருப்பு தேயிலை உதவி புரியும்.
கருப்பு தேயிலையால் தயாரிக்கப்படும் தேனீரில் அமிலம் நிறைந்துள்ளது. இது காலப்போக்கில் உங்கள் முடியை கருமையாக்கும்.
செய்முறை
- மூன்று கருப்பு தேநீர் பைகளை மூன்று கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
- கலவை 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் குளிர விடுங்கள்.
- பிறகு ஒரு தூரிகை அல்லது ஹேர் கலர் அப்ளிகேட்டரை எடுத்து தலைமுடியில் கலவையைப் பயன்படுத்துங்கள்.
- ஒரு மணி நேரம் கழித்து வழக்கமான தண்ணீரில் கழுவவும்.
- வாரத்தில் இரு முறை இப்படி செய்தால் நல்ல மாற்றத்தை பெறலாம்.
முக்கிய குறிப்பு
புதிதாக எதை முயற்ச்சி செய்தாலும் மருத்துவ ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.