அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. கமல், மீனா, நாகேஷ் உட்பட பலரும் நடித்துள்ள இப்படம் 2 மாநில திரைப்பட விருதுகளை பெற்றது.
இந்த படம் – Mrs Doubtfire (1993) என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் தழுவலாகும். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல இப்படம் வெகு சிறப்பாக காமெடியுடன் உருவாக்கப்பட்டிருக்கும்.
மேலும் இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனாவுக்கு குழந்தையாக ஆன் அன்ரா நடித்திருந்தார். இவர் கமலுடன் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவில்லை என்று தான் கூற வேண்டும்.
இப்படத்திற்கு பின்பு ஆன் அன்ராவிற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்த நிலையில், ஆனால் அவர் சினிமாவிலிருந்தே ஒதுங்கியிருந்தார்.
தற்போது மாடலிங் மற்றும் தொழிலதிபராக விளங்கி வருகிறார் ஆன் அன்ராவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |