பர்ஸில் பணம் வற்றாமல் இருக்கனுமா? இந்த பொருட்களை மட்டும் வைக்காதீங்க
உங்களது பஸ்ஸில் பணத்துடன் சில பொருட்களை ஒருபோதும் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
அந்த வகையில் நாம் பணத்தை வைக்கும் பர்ஸிற்கும் சில வாஸ்து டிப்ஸ்கள் உள்ளது. ஆம் சில பொருட்களை நாம் பயன்படுத்தும் பர்ஸில் வைக்கக்கூடாது.
அவ்வாறு வைப்பதால் நீங்கள் ஏழையாகவே இருக்கும் நிலை தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது. பர்ஸில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பர்ஸில் இதையெல்லாம் வைக்காதீங்க
வாஸ்து சாஸ்திரப்படி பழைய பில் அல்லது ரசீதுகளை பர்ஸில் வைக்கக்கூடாது. இவ்வாறு பயனற்ற தாளை பர்ஸில் வைப்பதால் எதிர்மறையான விளைவுகள் அதிகரிப்பதுடன், பர்ஸில் பணம் தங்குவதையும் நிறுத்திவிடும்.
பர்ஸில் பணத்துடன் கருப்பு நிற பொட்கள் எதுவும் வைத்திருப்பதை தவிர்க்கவும். கருப்பு பொருட்களை வைத்திருப்பதால் எதிர்மறை சக்தி அதிகரிப்பதுடன், இவ்வாறு செய்தால் பணம் உங்களிடத்தில் வருவதும் தடைபட்டு விடும்.
இதே போன்று பர்ஸில் ஊக்கு, சாவி, கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வைத்திருக்கக்கூடாது. இவற்றினை பணத்துடன் பர்ஸில் வைத்தால் அசுபமாக கருதப்படுவதுடன், தேவையற்ற செலவுகளும் வருமாம். மேலும் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |