தீபாவளியில் இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டமாம்...
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் என்றும், என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் புதிய ஆடை, பலகாரங்கள், பட்டாசு என்று வாங்கி மகிழ்ச்சியாக தீபாவளியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான தீபாவளி பண்டிகையில் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும், முக்கிய செயலாக பார்க்கப்படுவது எண்ணெய் குளியல் தான்.
பொதுவாக எண்ணெய் என்பதை அபசகுணமாக பார்க்கப்படும் நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தினை எண்ணெய் குளியலைக் கொண்டு ஆரம்பிப்பதற்கு காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எண்ணெய் குளியலும், சாஸ்திரமும்
எண்ணெய் தேய்த்து குளிப்பதிலும் சில சாஸ்திரங்கள் பார்க்கப்படுகின்றது. ஞாயிற்று கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மனவருத்தம் என்றும், திங்களில் குளித்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும், செவ்வாயில் குளித்தால் உடல் நல குறைவும், புதன் கிழமை குளித்தால் செல்வத்தையும், வியாழன் கிழமையில் குளித்தால் உடல்நலத்தினையும், வெள்ளி கிழமையில் குளித்தால் அதிக செலவையும், சனிக்கிழமை குளித்தால் விரும்பியதை அடைய முடியும் என்று கூறப்படுகின்றது.
தீபாவளிக்க்கு முதல்நாள் இரவு நல்லெண்ணெய்யில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயாராக வைத்து, தீபாவளி அன்று அதிகாலை குளிக்க வேண்டும்.

இதில் மிளகாய் வாயுவை அடைக்குமாம். மிளகு, சீரகம் ஜீரணத்திற்கு உதவும் என்று இஞ்சி பித்தத்தையும், மஞ்சள் குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. எண்ணெய் தேய்த்து சீயக்காய் பயன்படுத்தி அலசினால் உஷ்ணம் நீங்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
அதிகாலை என்பதால் குளிப்பதற்கு சுடு தண்ணீரில் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு இரவு வரை தூங்குவது கூடாது. ஏனெனில் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறிக் கொண்டிருக்கும் என்பதால், அத்தருணத்தில் தூங்கினால் உடல் பாதிக்கும்.

தீபாவளி கொண்டாட்டம் எதனால்?
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததையே தீபாவளியாக கொண்டாடுகின்றோம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து அதிகாலையில் குளிப்பதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றது. பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று ஏதாவது செய்தால் தான் மக்கள் நரகாசுரனைப் பற்றி நினைப்பார்கள் என்றும், அதிகமாக செல்லம் கொடுத்து தங்களது கெடுக்காமல் கவனமாக இருப்பார்கள் என்று நினைத்தார்.
எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றதுடன், அவ்வாறு இல்லாமல் தாமதமாகவோ, நேரத்திற்கு முன்போ குளித்தால் தவறானது என்றும் கருதப்பட்டது.
அதுமட்டுமின்றி நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அளித்த நேரம் அதிகாலை என்பதால் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம் என்று கூறப்படுகின்றது..

அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்
தீபாவளி அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுகின்றது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது.
மேலும் தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் – சரஸ்வதி; சந்தனம் – பூமாதேவி; குங்குமம் – கௌரி; தண்ணீர் – கங்கை; இனிப்புப் பலகாரம் – அமிர்தம்; நெருப்புப் பொறி – ஜீவாத்மா; புத்தாடை – மகாவிஷ்ணு என்று கூறப்படுகின்றது.
அதே போன்று தீபாவளி அன்று பசு மற்றும் கன்று இவற்றினை வணங்கினால் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |