காலை நடைப்பயிற்சி தொடங்கும் முன்பு எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?
பொதுவாக காலை நடைபயிற்சி தொடங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடைபயிற்சி
நம்மில் பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு சில தவிர்க்க வேண்டிய விடயங்கள் உள்ளது.
நாம் எழுந்திருக்கும் போது உடம்பில் தண்ணீரின் அளவு குறைவாகவே இருக்கும். ஏனெனில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்திருப்போம்.
எழுந்தவுடன் நீங்கள் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் தண்ணீர் குடிக்காமல் நடைபயிற்சி மேற்கொண்டால் தலைசுற்று போன்ற பிரச்சனை ஏற்படும்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது அதிக கொழுப்பை எரிக்கின்றது. ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாதாம். சிலருக்கு தீமையை ஏற்படுத்துகின்றது. ஆதலால் லேசான உணவாக வாழைப்பழம், ஊற வைத்த பாதாம், ஸ்மூத்தி போன்றவை சாப்பிடலாம்.
எதை தவிர்க்க வேண்டும்?
காலை எழுந்தவுடன் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் வார்ம் அப் செய்வது நல்லது. அதாவது சிறிய உடல் அசைவுகளை மேற்கொள்ளுங்கள். இது தசை பிடிப்பு போன்றவற்றையை தவிர்க்க உதவும்.
நடைபயிற்சி மேற்கொள்ளும் முன்பு காஃபி மற்றும் தேநீர் குடிப்பதை தவிர்க்கவும். இவை சிலருக்கு அமிலத்தன்மை ஏற்படுத்துவதுடன், வயிறு வலியையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
