Online இல் மீண்டும் வெளியாகும் அவதார் 2
தி வே ஆஃப் வாட்டர் என்ற அவதார் 2 திரைப்படமானது Disney+ மற்றும் Max ஆகிய இணையவழி தளங்கள் இரண்டிலும் விரைவில் வெளியாகவுள்ளது.
2009 ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படமானது வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த திரைப்படமானது 3 ஆஸ்கார் விருதுகளை கைப்பற்றியது.

அவதார் தி வே ஆப் வாட்டர்
சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகமானது 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்று கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வெளியாகி வசூலில் மட்டுமன்றி பார்க்கும் அனைவரது மனதையும் கவர்ந்தது.
Apple TV, Prime Video, Vudu, Google Play மற்றும் Movies Anywhere உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் படத்தை அடுத்த மாதம் 07ஆம் திகதி வெளியிடவுள்ளன.
Return to Pandora?
— Disney+ Hotstar (@DisneyPlusHS) May 16, 2023
Avatar: The Way of Water is streaming June 7 in Hindi, Tamil, Telugu, Malayalam & Kannada pic.twitter.com/ARm7HGCgGJ
ஆகையால் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும் அவதார் படத்தின் மூன்றாம் பாகமானது, இவ்வருடம் டிசம்பர் மாதம் 20 திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
