தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! நேரலை வீடியோ காட்சிகள்
உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது.
வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் உலக புகழ் பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.
போட்டியில் 1004 காளைகள் மற்றும் 318 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் ஆர்வமாக அடக்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.