வீட்டுல அவல் இருக்கா? இந்த மாதிரி உப்புமா செய்து பாருங்க சுவையோ சுவை
பொதுவாகவே காலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலை உணவை குறுகிய நேரத்தில் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் தயார் செய்வது சவாலான விடயமாகவே இருக்கின்றது.
இப்படி காலை உணவை தயார் செய்வதில் குழப்பதில் இருக்கும் பெண்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் மிகவும் எளிமையாக தயாரிக்க கூடிய அவல் உப்புமா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி அவல் - 2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4
நறுக்கிய இஞ்சி - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 1/4 கப்
எலுமிச்சை பழ சாறு - 1தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 1/2 தே.கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தே.கரண்டி
கடலை எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதவில் ஒரு பாத்திரத்தில் அவலை கழுவி சுத்தம் செய்து 1 நிமிடம் வரை தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். (அவலை அதிக நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட கூடாது)
அதன் பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடானது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேர்க்கடலையை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் கடுகு மற்றும் சீரகம் போட்டு கொள்ளுங்கள். கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறிய பின்னர்மஞ்சள் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து அதனையும் வதக்கிக்டிகொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி நன்றாக வதங்ககியதும் ஊறவைத்து வடிகட்டிய அவலை சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.
கடைசியில் வறுத்த வேர்க்கடலை, எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான அவல் உப்புமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |