அம்மா.. ஆட்டோ டிரைவர் கடத்திட்டு போறான்... தாய்க்கு மகள் செய்த போன் கால்! பதறிய பெற்றோருக்கு பின்பு கிடைத்த ஷாக்
கல்லூரி மாணவி ஒருவர் தன்னை ஆட்டோ சாரதி கடத்திச் செல்வதாக தாயிடம் கூறியுள்ள நிலையில், பதட்டத்தில் இருந்த பெற்றோருக்கு மகள் வேறுஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். ஆம் ஆட்டோ சாரதியால் 19 வயது மாணவி கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, ஹைதராபாத் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது. கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை கடத்திச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பின்பு அவரின் மொபைல் போனை தொடர்பு கொள்ளமுடியவில்லையாம்.
பின்பு குறித்த பெண் அன்னோஜிகுடா என்னும் பகுதிக்கு அருகில் உடம்பில் சிலகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விசாரணையில் இளம்பெண் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்று அடித்ததாகவும், அதன் பின் தன்னை வேன் ஒன்றில் வைத்து, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இளம்பெண் கொடுத்த தகவலின் பேரில் ஆட்டோ சாரதியை விசாரித்துள்ளனர்.
அப்பொழுது பெண் கூறி நேரத்தில் அவர் அங்கு இல்லை என்பது தெரியவரவே மீண்டும் இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்கு பின் முரனான பதில் அளித்ததால் பொலிசாருக்கு இளம்பெண் பொய் கூறுவதாக தோன்றியுள்ளது. பின்பு பெண் கூறிய இடத்தினை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆட்டோவில் இருந்து தனியாக இறங்குவதையும், மீண்டும் அங்கிருந்து வேறு ஆட்டோவில் 4 கிலோ மீற்றர் செனறு இறங்கியதும் தெரியவந்துள்ளது.
குறித்த இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியேற வேண்டி இவ்வாறான நாடகத்தை போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் ஆட்டோ சாரதி மீது வேண்டுமென்றே புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் குறித்த பெண்ணிற்கும் அந்த ஆட்டோ சாரதிக்கு ஏற்கெனவே தகராறு இருந்ததால், அவரை பலிவாங்க இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது.