காதல் கணவனுக்காக மூட்டை சுமக்கும் வெளிநாட்டு பெண்: வைரல் வீடியோ
இந்தியரை திருமணம் செய்த அவுஸ்திரேலிய பெண்ணொருவர் வயல்வெளியில் புல் மூட்டையை சுமக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
காதலால் இணைந்த இரு மனங்கள் நாடு கடந்து திருமணம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
வெவ்வேறு கலாசாரங்களை கொண்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியரை திருமணம் செய்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கணவருக்காக வயல்வேளைகளை செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Loveleen Vats என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
துணியில் புற்களை மூட்டையாக கட்டியபடி, வயல் வெளியில் நடந்து செல்லும் Courtneyயின் காதலை புகழாதவர்கள் எவரும் இல்லை.