ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரோனாவால் பலியான முதியவர் - வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓமிக்ரோன் வைரஸ் பரவ தொடங்கி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 500 பேர்கள் வரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனையடுத்து, ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சற்று முன் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே, இங்கிலாந்து அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் பலியாகி இருக்கும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் முதலாவதாக ஒரு நபர் ஒமிக்ரான் வைரசால் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.