இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம்!
இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினர் தங்களுக்கு இரணை்டாவது குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவுக்கு இணையத்தில் லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
இயக்குனர் அட்லீ - பிரியா
தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை இயக்கினாலும் குறுகிய காலத்தில் பிரபல்யமானவர் தான் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கத்தில் உருவான எல்லா திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அட்லி இயக்கத்தில் முதலில் உருவான ராஜா ராணி திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால், அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லா திரைப்படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமன்றி வசூலையும் வாரிக்குவித்தது.

அதனை தொடர்ந்து, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ள அட்லீ, தனது மனைவி ப்ரியாவை ஒரு லக்கி சார்ம் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா. இவரை இயக்குனர் அட்லீ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்ற நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்டாகிராம் பக்கத்தில் அட்லீ பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளதுடன்,வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |