இதுவரை நீங்கள் அறிந்திடாத பல அதிசயங்களை கொண்ட அட்டகாமா பாலைவனம்.. வியப்பூட்டும் காணொளியுடன்..
பூமியில் உள்ள பழைய பாலைவனமாக அட்டகாமா பாலைவனம் கருதப்படுகிறது. மேலும், 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாலைவனம் உருவாகியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே வரண்ட நிலமாகவும், வாழ தகுதியற்ற இடங்களாகவும் கருதப்படுவது என்றால் அது பாலைவனம் தான். அதுவும், பாலைவனம் என்றாலே அனைவரின் கண்முன் தோன்றுவது பரந்த மணல் பரப்பும், உப்பு படுகைகளும், எரிமலை வெடிப்புகளும் தான்.
அந்த வகையில், உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனமாக இருப்பது தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அட்டகாமா பாலைவனம் தானாம். சஹாரா பாலைவனம் கூட இல்லை. மேலும், மற்ற பாலைவனங்களைப் போல இல்லாமல் அட்டகாமா பாலைவனத்திற்கென பல தனித்தன்மைகள் இருக்கின்றன.
இந்த பாலைவனமானது, தென் அமெரிக்காவின் இரு பிரதான நாடுகளான பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கிடையே அமைந்துள்ளது. இவை, கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒருபுறம் ஆண்டிஸ் மலைத்தொடரும் மறுபுறமும் பசிபிக் கடற்கரையோரமுமாக சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமும் சுமார் 1,28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.
இந்த பாலைவனத்தில் மணல் குவியலைப் பார்க்க முடியாது. இங்கே மணலை விடவும் உப்புப் படுகைகளும், எரிமலை குழம்புப் படிமங்களும் அதிகமாகவே உள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாலைவனம் உருவாகியிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் மற்ற பாலைவனங்களில் சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருக்கும்.
ஆனால் அட்டகாமா பாலைவனத்தில் சராசரி வெப்பநிலையே 18 டிகிரி செல்சியஸ்தான் தானாம். அட்டகாமா பாலைவனத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாகவே உள்ளது. இந்த அபூர்வ அட்டகாமா பாலைவனத்தில், ஆண்டுக்கு 330 நாள்களுக்கு வானத்தில் மேகங்களே இருப்பதில்லையாம். மேலும், அட்டகாமா பாலைவனத்திம் தனி சிறப்புகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ள காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்...