Vastu Tips: வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிறைந்து இருக்கனுமா? கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க
வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் செல்வம் பெருக
வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் மங்களகரமாக கருதப்படுகின்றது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
தினமும் பூஜை செய்யும் போது கற்பூரம் ஏற்றினால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி அமைதி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கற்பூரத்தை தினமும் வீட்டில் ஏற்றினால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, உங்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பை வழங்குவாராம்.
தினமும் மாலை வேளையில் வீட்டில் கற்பூரத்தை ஏற்றினால் செய்யும் தொழிலில் செழிப்பைக் காண்பீர்கள்.
மேலும் மாலை நேரத்தில் கற்பூரத்துடன் கிராம்பையும் சேர்த்து எரித்தால் வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டி நீங்கும்.
அறிவியல் காரணம் என்ன?
அறிவியலின்படி, கற்பூரத்தை வீட்டில் ஏற்றினால் அதிலிருந்து வரும் புகையானது வீட்டில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்குமாம்.
மேலும் இதனை தினமும் செய்து வந்தால் வீட்டில் கிருமிகள் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |