கழுத்தை நெரிக்கும் கடன்தொல்லையா? விடுபட இதை மட்டும் செய்தால் போதும்
இன்று பெரும்பாலான நபர்கள் கடன் பிரச்சினையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஆம் ஏதாவது ஒரு காரணத்திற்காக வாங்கும் கடன் இறுதியில் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு வந்து நிற்கின்றது. இதற்கான பரிகாரத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
கடன் தீர்க்கும் பரிகாரங்கள் என்ன?
கால பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தால் கடன் பிரச்சினையிலிருந்து வெளி வரலாம். 27 மிளகை எடுத்து வெள்ளை நிற துணி ஒன்றில் மூட்டையாக கட்டி, அதனை உங்களது தலையணைக்கு அடையில் வைத்து தூங்க வேண்டும். பின்பு காலையில் எழுந்து குளித்து முடித்து குறித்த மிளகு மூட்டை எடுத்து கோவிலில் கால பைரவர் முன்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய ஊற்றி அதில் மிளகு மூட்டையை நனைத்து வைத்து தீபம் ஏற்றினால் கடன் பிரச்சினை அகலுமாம். இதனை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை தோறும் செய்ய வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கினால் கடன் பிரச்சினையிலிருந்து விடுபடமுடியுமாம். செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் கடன் விமோசன பிரதோஷம் என்று கூறப்படும் நிலையில், இந்த காலத்தில் பசும்பால் அல்லது இளநீர் இவற்றினால் அபிஷேகம் செய்து, நந்தியை வணங்கி அருகம்புல் மாலை, நெய் தீபம் ஏற்பி வழிபட்டால் கடன்சுமை முற்றிலும் அகலும்.
- வியாழக்கிழமையில் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலில் அம்மனுக்கு கொடுத்து வந்தால் கடன் பிரச்சினை தீரும். இதனை 11 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
- குல தெய்வ வழிபாடு செய்து வந்தால், குடும்பத்தில் நிம்மதி கிடைப்பதுடன், கடன் பிரச்சினையும் தீர்ந்து விடுகின்றது.
- கர்மத்திற்கு ஏற்ற பலன்களை கொடுக்கும் சனி பகவனை தொடர்ந்து வணங்கி வந்தால் கடன் சுமையிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |