திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய தமிழக வீரர் அஷ்வின்- காரணம் இதுவா?
கொரோனா இந்தியாவில் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது,. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறி வரும் நிலையில், பல நாடுகள் உதவிக்கு முன் வர தொடங்கியுள்ளன.
மேலும், பல பிரபலங்களும் உதவிக்கரத்தை நீட்ட தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஐபிஎல் சீசன் மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.
பலரும் ஐபிஎல் காண இரவில் செல்வதை தவிர்க்கின்றனர். மேலும் ஐபிஎல்லில் ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த நடராஜன் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது டெல்லி அணியில்ஆடிவரும் தமிழகத்தை சேர்ந்த சீனியர் ஸ்பின்னரான அஷ்வின், ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் தனது குடும்பத்துடன், தான் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த சீசனிலிருந்து இத்துடன் விலகுவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அஷ்வின்.
மேலும், நிலைமை சீரடைந்தால், திரும்ப வருவதாக தெரிவித்துள்ளார். குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதற்காக இந்த சீசனிலிருந்து அஷ்வின் விலகுவதில், டெல்லி கேபிடள்ஸ் அணி எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று டெல்லி கேபிடள்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
I would be taking a break from this years IPL from tomorrow. My family and extended family are putting up a fight against #COVID19 and I want to support them during these tough times. I expect to return to play if things go in the right direction. Thank you @DelhiCapitals ??
— Stay home stay safe! Take your vaccine?? (@ashwinravi99) April 25, 2021
? UPDATE ?
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks?) (@DelhiCapitals) April 25, 2021
Ravichandran Ashwin has decided to take a break from #IPL2021 to support his family in the fight against #COVID19, with the option to return should things get better.
We at Delhi Capitals extend him our full support ?#YehHaiNayiDilli pic.twitter.com/A9BFoPkz7b