அச்சு அசல் அசீம் போல் இருக்கும் மகன்! பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்று கூடிய சொந்தங்கள்
பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் அசீமுடன் சேர்ந்து அவருடைய மகன் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அதன் தாக்கம் இன்று வரை இருந்து வருகிறது.
மகனுடன் மீண்டும் இணையும் பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில் அசீம் பல இடங்களில் தன்னுடைய மகனின் பிரிவு குறித்து தான் கவலையாக இருப்பதாகவும் அவரை பார்க்க வேண்டும் எனவும் கூறிவந்தார்.
பிக்பாஸில் ப்ரிஸ் டாஸ்க்கில் கூட அசீமை பார்க்க மகன் தான் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவரின் தம்பி தான் பார்க்க வந்தார்.
இதனை தொடர்ந்து அசீமை டைட்டில் வின்னர் என அறிவித்த போதும் இதனை பார்ப்பதற்கு அவரின் மகன் என யாரும் வராத நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற ஷோவிற்கு அசீமின் அன்பு மகன் வரவழைக்கப்பட்டுள்ளார்.
இதனை பார்த்த அசீம் தன்னுடைய மகனை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நான் சிறு வயதாக இருக்கும் போது என்னுடைய பெற்றோர்கள் எனக்கு என்ன கொடுத்தார்களோ அதனை என்னுடைய மகனுக்கும் கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய மகனுடன் சேர்ந்து மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இதற்கு சக பிக் பாஸ் பிரபலங்கள் ஆரவாரத்துடன் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.