கை குழந்தையாக இருந்த ஆர்யாவின் மகளா இது? அட்டகாசமான அழகுடன் எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க
நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் தங்கள் மகள் ஆரியானாவுடன் எடுத்துக்கொண்ட காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் ஆர்யா, சாயீஷா தம்பதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, வனமகன் திரைப்பத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகை சாயீஷாவைக் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்தார்.
கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகள் மகள் ஆரியானாவுடன் கோடைவிடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருகின்றனர். இதில் கைக்குழந்தையாக இருந்த ஆரியானா தற்போது நன்றாக வளர்ந்துள்ளார்.
சாயீஷாவும் அட்டகாசமான அழகுடன் காணப்படும் காணொளியினை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.