செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புதிய புகைப்படங்கள்
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ஜொலிக்கும் ஆர்த்தியின் தற்போதைய புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.
ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.
மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.
தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் ஆர்த்தி ரவி சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |