சோகமான நாய் ரீல்கள் கூட என்னை அழ வைக்கின்றன: மனக்குமுறல்களை கொட்டி தீர்த்த ஆர்த்தி ரவி!
என் காதலை வெளிப்படுத்துகிறேன்...படங்களில் மட்டுமல்ல, சிறிய உண்மைகளிலும் நான் அரிதாகவே பகிர்ந்து கொள்கிறேன் என குறிப்பிட்டு ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள ட்ரெண்டிங் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.
ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.
மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.
அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார்.குறித்த விடயம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்த்தி ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் நெட்சன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில், என் காதலை வெளிப்படுத்துகிறேன்.. படங்களில் மட்டுமல்ல, சிறிய உண்மைகளிலும் நான் அரிதாகவே பகிர்ந்து கொள்கிறேன். பயணம் என்பது எனது சிகிச்சை.நான் காதலிக்கும்போது, நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன்.
ஸ்பானிஷ் தக்காளி + கோகோ கோலா எனது நள்ளிரவு குற்ற உணர்ச்சி.நான் உங்களுக்கு உண்மையிலேயே நெருக்கமாக இல்லாவிட்டால் நான் எளிதில் மனம் திறந்து பேசுவதில்லை.
சோகமான நாய் ரீல்கள் என்னை அழ வைக்கின்றன. என் டீன் ஏஜ் பையன்களை கட்டிப்பிடித்து முத்தமிடுவதன் மூலம் சங்கடப்படுத்துவது எனது புதிய மகிழ்ச்சியாக மாறிவிட்டது.
எனது இளையராஜா ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட் எனது மறைக்கப்பட்ட புதையல். ஒவ்வொரு வார்த்தையையும் எல்லாவற்றையும் நான் இதயத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.
நான் ஒரு உள்முக சிந்தனையாளர்.உலகம் மிகவும் கனமாக உணரும்போது, எழுத்தில் என் அமைதியைக் காண்கிறேன்.
சரியானதல்ல, நேர்மையானது அது போதும் என தனது மன குமுமரல்களை கொட்டி தீர்த்து தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி பருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |