அர்னவை தூண்டி விட்டு அசிங்கப்படுத்தியதே விஜய் சேதுபதி தானா? உச்சக்கட்ட கடுப்பில் பிரபலம்
அர்னவை தூண்டி விட்டு அசிங்கப்படுத்தியதே விஜய் சேதுபதி தான் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரத்திற்கான தலைவராக பவித்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
வெளியே சென்றும் திருந்தலையா?
இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட அர்னவ் மேடையில் வைத்து விஜய் சேதுபதியால் அவமானப்படுத்தப்பட்டார்.
அத்துடன் “என்னுடைய வீட்டில் உள்ளவர்களை நீங்கள் அப்படி பேசாதீங்கள்..” என்று கண்டனமும் தெரிவித்திருந்தார். இது அர்னவின் மீடியா பயணத்திற்கு இடியாக விழுந்துள்ளது.
தர்ஷா குப்தா சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக கருத்தை சொல்லுங்கள் என சொன்னதும், நீங்கள் சரியாக தான் பேசுறீங்கள் பேசுங்கள் என விஜய் சேதுபதி சொன்ன காணொளியை அர்னவ் டேக் செய்து ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
மேலும், அர்னவ், ஜால்ராஸ் என ஆண்கள் அணியை சேர்ந்த தீபக், விஷால், அருண், சத்யா என அவர் சொன்ன வீடியோக்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையே பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், “ வெளியே போயும் இவர் திருந்தவில்லையா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |