மருமகனுக்கு மறக்க முடியாத கல்யாண பரிசு... அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு
நடிகர் அர்ஜுன் தான் நடித்த ஏழுமலை படத்தின் இரண்டாவது பாகத்தில் அவரது மருமகன் உமாபதி ராமையாவை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
அதாவது உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சர்வையர் நிகழ்ச்சியினை அர்ஜுன் தொகுத்து வழங்கும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தநிலையில், அத்தருணத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. தனது மகளுக்கு அர்ஜுன் அனைத்தையும் சிறப்பாக செய்ததுடன், கல்யாண பரிசாக பணம் மற்றும் நகை மட்டுமின்றி சில சொத்துக்களையும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜுன் தனது மாப்பிள்ளைக்கு தற்போது கொடுக்கும் பரிசு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஹீரோவாகும் உமாபதி
அதாவது அர்ஜுன் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான எழுமலை படம் பிளாக்பஸ்டர் படமாக இருந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அவரது மருமகனான உமாபதியை கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். மேலும் அர்ஜுன் சிறப்பு கதாபாத்திரத்தில் வருவதாகவும், அவரது மகள் ஐஸ்வர்யா உமாபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |