நடிகர் அர்ஜுன் உருகி உருகி காதலித்த பிரபல நடிகை யார் தெரியுமா?
நடிகர் அர்ஜுன் நடிகை ஒருவரை உருகி உருகி காதலித்த தகவல் பல ஆண்டுக்கு பின்பு தற்போது வெளியாகியுள்ளது.
அர்ஜுன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் நடிகர் அர்ஜுன் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். இவர் நடித்த படங்கள் அதிகம் தேசிய உணர்வை தூண்டும் படங்களாக இருக்கும்.
இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதேபோல், அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜூன், உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை தயாரித்து வருகின்றார்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர் மீது எந்தவொரு புகாரரும் வராத நிலையில், அவன் நிபுணன் என்ற திரைப்படத்தின் நடித்த போது அவர் மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
அப்படத்தில் நடித்த ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரன், நெருக்கமான காட்சியின் போது அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். அது உண்மை இல்லை என்று அர்ஜுன் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அர்ஜுன் நடிகை நளினியை உருகி உருகி காதலித்ததாகவும், இதனை அவரிடம் கூறவில்லையாம். அத்தருணத்தில் நளினி டாப் ஹீரோவாக இருந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துவிட்டாராம்.
ஆதலால் அர்ஜுனின் காதல் கடைசிவரை ஒருதலை காதலாகவே சென்றுவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.