அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படியொரு ரகசியமா?
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தனது திருமணத்தில் அணிந்திருந்த சேலையின் தனித்துவத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆவார். இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அர்ஜுன் தொகுத்து நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்ட போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் கோவிலில் கோலகலமாக நடந்து முடிந்தது.
ஐஸ்வர்யா புடவையின் சீக்ரெட்
இந்நிலையில் ஐஸ்வர்யா திருமணத்தில் அணிந்திருந்த நகை மற்றும் புடவை வைரலாகி பார்க்கப்பட்டு வருகின்றது.
சிவப்பு நிற காஞ்சிபுற புடவையும், இதற்கு பொருந்தும் விதமாக சிவப்பு நிற ஆரி ஒர்க் நிறைந்த ஜாக்கெட், வெள்ளை நிற கல் பதித்த நகை, சோக்கர், வளையல், நெத்தி சுட்டி என அனைத்தும் தங்கம் மற்றும் வைரலக்கல் பதித்து அணிந்திருந்தார்.
பொன்னியின் செல்வம் படத்தில் பணியாற்றிய பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி தான் ஐஸ்வர்யாவின் புடவையை வடிவமைத்துள்ளார்.
அவர் குறித்த புடவையை பற்றி கூறுகையில், பாரம்பரிய கோயில் சிற்பங்களால் ஏற்கப்பட்டது எனவும்,தூய காஞ்சிவரம் பட்டுப் புடவையான இதில், ராமரின் முடிசூட்டு விழாவை சித்தரித்து நெய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே போல் தூய காஞ்சிவரத்தின் பிறப்பிடமான காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் சுவர்களில் உள்ள சிற்பங்களால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள் இதில் அடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புடவை முழுவதும் தூய சர்தோசி எம்பிராய்டரி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |