AI துறையில் வேலை தேடுறீங்களா? இந்த Skill இருந்தாவே போதும்- வாய்ப்பு நிச்சயம்!
நவீன மயமாக்கப்பட்ட உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவுடன் ( Artificial intelligence) தொடர்புப்பட்ட வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதற்கேற்றால் போல் தற்போது செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகளும் வந்து விட்டன.
AI துறைகளில் படிப்பை பலர் இன்றும் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள்.
இப்படியான வேலைகளை தேடுபவர்கள் கீழ் காணப்படும் வேலைக்கு முயற்சி செய்யலாம்.
அந்த வகையில் AI துறைகளில் படிப்பை முடித்தவர்கள் வேலை செய்வதற்கு வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
1. Machine Learning (ML)
செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாக மெஷின் லேர்னிங் பார்க்கப்படுகின்றது. அதற்கான தரவுகளை பாதுகாப்பது மிக அவசியம். இது மோசடிகளை கண்டுபிடித்தல், புகைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ளல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
2. Python
AI துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் பைத்தான் மொழி படித்திருக்க வேண்டும். இது ஒரு புரோகிராமிங் மொழியாகும். வெப் டெவலப்பர்களாக இருப்பவர்களுக்கு இந்த மொழி அவசியம் தேவை. உலகளாவிய ரீதியில் இந்த மொழியை தொழிநுட்பம் துறை சார்ந்தவர்கள் படிப்பார்கள்.
3. Deep Learning
மெஷின் லேர்னிங்கில் Deep Learning என்பது ஒரு பிரிவாக பார்க்கப்படுகின்றது. இது சிக்கலான தரவுகளை புரிந்து கொண்டு செயலாக்க ஒரு நியூரல் நெட்வொர்க்காக பயன்படுகிறது. தரவுகளை மொழிமாற்றங்கள் செய்வதற்காகவும் தானியங்கி கார்களுக்கு இது அவசியமாக பார்க்கப்படுகின்றது.
4. Natural Language Processing
மனிதர்களுக்கு தேவையான கணினிகளை அதன் மொழிகளை புரிந்து கொண்டு உருவாக்க இந்த திறன் அவசியம். சாட் பாட்கள், மெஷின் டிரான்சிலேசன், சென்டிமென்ட் அனலிசஸ் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |