ப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வைத்த Last Twist- நாளை வரவிருக்கும் “அந்த” இரு நபர்கள்- காத்திருக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் இறுதியாக இரு நபர்களை உள்ளே அனுப்பப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
பிக்பாஸ் 8
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் சுவாரஸ்யம் குறையாமல் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் தமிழ் தற்போது 8-ஆவது சீசன் சென்றுக் கொண்டிருக்கின்றது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் எண்ட்ரி கொடுத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஜே விஷால், ஜெஃப்ரி, தீபக், ராணவ், ரயான், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா என மொத்தமாக 11 பிரபலங்கள் உள்ளனர்.
உள்ளே வரும் விஷ்ணு
இந்த நிலையில், அருண் பிரசாத்தின் பெற்றோர்கள் உள்ளே வந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களின் நண்பர்கள் நாளைய தினம் வரவிருக்கிறார்கள்.
ப்ரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே வரும் போட்டியாளர்களின் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு பரபரப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் உள்ளே வந்தால் டாப்பில் இருக்கும் முத்துக்குமரன், மஞ்சரி ஆகியோருக்கு செம டோஸ் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.
இது நடந்தால் இந்த வாரம் டிஆர்பி எகிறிவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |