அறந்தாங்கி நிஷாவின் டயட் பிளான் - 50 நாட்களில் 14 கிலோ எடை குறைப்பு
சின்னதிரை வெள்ளிதிரை மற்றும் யூடிப் களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அறந்தாங்கி நிஷா 50 நாளில் 14 கிலோ எடை குறைத்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா
பிரபல பெண் தொகுப்பாளினி மற்றும் நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுகளின் மூலம் ரசிகர்களை வைத்துள்ளார். இது தவிர பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
மேலும் ஜெயிலர், கோலமாவு கோகிலா 2, திருச்சிற்றம்பலம், ராயன், சீமராஜா போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது டிவி நிகழ்ச்சிகளிலும் வருகிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை மட்டுமன்றி இணையத்திலும் நிஷா பிரபலமாக வருகிறார்.

எடை குறைப்பு
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிஷா தற்போது தன் எடையையும் குறைத்துள்ளார். அதுவும் மிக குறுகிய காலத்தில் அதிகமான எடையை குறைத்துள்ளார்.
இதை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். இவர் மொத்தமாக குறைத்த எடை 50 நாட்களில் 14 கிலோ வரை என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் எப்படி எடை குறைப்பு சாத்தியப்பட்டது என்பது பற்றி அந்தப் பதிவில் விளக்கமான தகவல் எதுவும் இல்லை.

பொதுவாக மருத்துவர்கள் குறுகிய கால எடை இழப்பு, அதுவும் கடுமையான டயட் மூலமான எடை இழப்பை பரிந்துரைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம், அது நீண்டகால பலனையோ ஆரோக்கியமான வாழ்வையோ கொடுக்காது. இது திவிர அந்த குறிகிய காலத்திற்கு நாம் எடை குறைத்தால் அது மறுபடியும் எடையை அதிகரிக்க தான் செய்யும்.
எனவே எடை குறைப்பில் நிதானமான, நீண்டகால பலன்களை உடன் பயன்பெற, நிபுணர்கள் அறிவுரையுடன் பேலன்ஸ்ட் டயட் எனப்படும் சமச்சீர் உணவு முறையை பின்பற்றுவது, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது போன்றவை அவசியமாகிறது.

நிஷா கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அதன்மூலம் தான் உடல் எடை குறைத்ததாக தனது யூ ட்யூப் சேனலான கருப்பு ரோஜாவில் தெரிவித்து வந்தார்.
எனவே உணவுமுறை மூலமாகவே அவர் எடை குறைத்திருப்பார் என சொல்லப்படுகிறது.
என்ன உணவு என்று சொல்லவில்லையே தவிர, நிபுணர் பரிந்துரையின் கீழ் அவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டே எடை குறைத்துள்ளார் நிஷா என்பது அவரது யூ-ட்யூப் பக்கம் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆனால் ,ப்பதிவை வைத்து யாரும் தேவையில்லாத உணவை மருத்துவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ள வேண்டாம். காரணம் எல்லோருக்கும் எல்லா உணவும் நன்மை தராது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |