திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா திருமண முறிவு... வைரலாகும் ரகுமானின் திருமண கதை
சமீபகாலமாகவே பல பிரபலங்கள் தங்களின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்களின் விவாகரத்து முடிவை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு குறித்து வெளியிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டதாகவும் அதனை தீர்ப்பதற்கு இருவரும் முயற்சித்த போதிலும் தோல்வியுற்றதால் இந்த கடினமான முடிவை எடுப்பதாகவும் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
1995ல் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா திருமணம் நடைபெற்றது. காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற ரஹ்மான் காதலித்து திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்ரா பானுவின் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் முன்னதாக தனது திருமணம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துக்கொண்ட பல நெகிழ்ச்சியாக விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவர் திருமணம் தொடர்பாக பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் மற்றும் சாய்ரா பானு எடுத்துள்ள இந்த கடினமான முடிவு தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |