கணவரை பிரிவதாக அறிவித்தார் Basist மோகினி- வைரலாகும் பதிவு
பாடகி மோகினி டேவும் அவருடைய கணவர் மார்க்கை பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.
மோகினி டே
மும்பையில் பிறந்து வளர்ந்த 28 வயதான மோகினி டே, கொல்கத்தாவில் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்தியளவில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இதற்கமைய பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
விவாகரத்து முடிவு
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோகினி டே அவருடைய கணவரை பிரிந்து வாழப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ இருவரும் ஒரு மனதாக விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருந்தாலும், தொடர்ந்து இசைத்துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்..” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், மோகினி டே விவாகரத்து முடிவிற்கு என்ன காரணம் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
