நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆப்ரிகாட் பழம்.... இவ்வளவு அற்புத நன்மைகளா?
நாம் உண்ணும் பழவகைகள் உடம்பிற்கு பல வகையான சத்துக்களை தருகின்றது. அன்றாட உணவில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டியது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அந்த வகையில் பழ வகைகளில் ஒன்றான ஆப்ரிகாட் பழத்தை பற்றியும், அதில் உள்ள மருத்துவ குணம் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சீமை வாதுமை என்று சொல்லப்படும் பழம் தான் இந்த மஞ்சள் நிறம் கொண்ட ஆப்ரிகாட் பழம். இதில், வைட்டமின் ஏ 12% வைட்டமின் சி 6% பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த ஆப்ரிகாட் பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதை உலர வைத்து சாப்பிடுவதை பெரிதும் விரும்புகிறார்கள். இவை குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.
குடலில் மலத்தை தேக்காமல் வெளியேற்ற செய்கிறது. இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்கிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு–காஷ்மீரில் பரவலாக பயிரிடப்படும் ஆப்ரிகாட் உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான பல நன்மைகளை பயக்கிறது.
நன்மைகள்
இதயத்துக்கு நார்ச்சத்து மிக்க இந்த ஆப்ரிகாட் பழமானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க செய்கிறது. பின் இது இதயத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான பணி ஆகும். இது கெட்ட கொழுப்பை கரைப்பதோடு உடலில் நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.
பழத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கமானது எலக்ட்ரோலைட் அளவை சமப்படுத்த செய்கிறது. இது இதய தசைகளை ஒழுங்காக வைத்திருக்கிறது,
தினசரி ஒரு ஆப்ரிகாட் அல்லது உலர்ந்த சில துண்டுகளை சாப்பிட்டு வந்தால் போதுமானது. இரத்தத்துக்கு நன்மை ஆப்ரிகாட் பழத்தில் இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
இது உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். அதனால் இரத்த சோகை போன்ற இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்கப்படுகிறது.
நீரிழிவு சரிசெய்யும்
உலர்ந்த பழங்களாக இருந்தாலும் அப்படியே சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நன்மை செய்யும். இது குறைந்த கிளைசெமின் குறியீட்டைக் கொண்டுள்ளது.
உலந்த ஆப்ரிகாட் பழங்களிலிருக்கும் மிதமான அளவு கொண்ட பிரக்டோஸ் ஆனது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
இது இன்சுலின் அளவுகளில் நன்மை பயக்ககூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எலும்புகளை பலப்படுத்தும்
ஆப்ரிகாட்பழத்தில் அதிகமாக கால்சியம் உள்ளது. உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாமல் கால்சியம் உறிஞ்சப்படுவது பயனளிக்காது.
ஆனால் அதிர்ஷ்டவசாமாக ஆப்ரிகாட் பழம் இரண்டையும் கொண்டுள்ளது. ஆப்ரிகாட் இருக்கும் எலக்ட்ரோலைட் உடலில் நரம்பு சமிக்ஞைகளை ஒழுங்கு படுத்துகிறது. தசை சுருக்கங்கள் மற்றூம் திரவ சமநிலையை ஒழுங்குப்படுத்துகிறது.
திரவ சமநிலையை பராமரிக்க பொட்டாசியம் சோடியம் உடன் செயல்படுவதால் இது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் செய்கிறது.
இயற்கையாகவே தண்ணீர் அதிகம் கொண்டிருக்க கூடியவை. இது இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, மூட்டு ஆரோக்கியம் மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.
சருமத்தை பாதுகாக்கிறது
சருமத்தை வயதான விளைவுகளிலிருந்து பாதுகாக்க இந்த ஆப்ரிகாட் உதவக்கூடும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.
உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களில் இயற்கையாகவே வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தின் வயதை மெதுவாக்க செய்கிறது. நல்ல சரும பராமரிப்புக்கு சில ஆப்ரிகாட் பழங்களை எடுத்துகொள்வது நன்மை பயக்க கூடும்.
கல்லீரலை பாதுகாக்கும்
கல்லீரல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்க ஆப்ரிகாட் பழங்கள் உதவக்கூடும். கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகிறது.
செரிமான பிரச்சினைக்கு
கல்லீரல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்க ஆப்ரிகாட் பழங்கள் உதவக்கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கல்
உலர் ஆப்ரிகாட் பழங்களில் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.
அடுத்து, மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.
குழந்தையின்மை பிரச்சினைக்கு
குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனை சரியாகும்.
மேலும் இந்த உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்த உலர் பழம் பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை குணப்படுத்துவதில் நல்ல வல்லமை வாய்ந்தது. காய்ச்சல் உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும்.
ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும்.
ஆஸ்துமா நிவாரணம்
காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.
உடல் எடையை குறைக்க
கரையாத நார்ச்சத்து நம் உடலில் இருப்பதால் பசியின் தன்மை ஏற்படாது. 4 லிருந்து 6 மணி நேரம் வரை வயிறு நிரம்பிய உணர்வினை நம்மால் உணர முடியும்.
மேலும், உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடுவதை இதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும். இது நம் உடல் எடையை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது.