நிலாவில் முதன்முறையாக சிறுநீர் கழித்த நபர் யார் தெரியுமா?

Moon Landing Apollo Mission
By Fathima Jul 27, 2021 08:35 AM GMT
Report
Courtesy: Dinamani

நிலவில் கால் வைத்து நடந்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். எல்லாருக்கும் தெரியும், ஆனால், 'உச்சா' போனவர் யார் தெரியுமா?

அப்போலோ விண்கலத்தில் சென்று நிலவில் மனிதன் இறங்கி, இன்றுடன், 52 ஆண்டுகளாகின்றன.

1969 ஆம் ஆண்டில் ஜூலை 20 நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் நிலவை வென்றனர்.

1969 ஜூலை 16 ஆம் நாள் கேப் கென்னடி ஏவுதளத்திலிருந்து நிலவுக்குச் செலுத்தப்பட்டது அப்போலோ 11.

நிலவில் முதன்முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங்தான் இறங்கிக் கால்பதித்து நடந்தார்.

நிலவில் கால் பதித்தபோது, ஒரு மனிதனுக்கு இது [ஒரு] சிறிய அடி, மனித குலத்துக்குப் பெருந்தாவல்! என்று குறிப்பிட்டார்.

நிலாவில் முதன்முறையாக சிறுநீர் கழித்த நபர் யார் தெரியுமா? | Apollo Mission Landing On Moon

மகிழ்ச்சி கலந்த பதற்றத்தில், தான் தயாரித்துவைத்திருந்த வரியில், 'ஒரு' என்பதைச் சொல்ல விட்டுவிட்டார்.

நிலவின் தரைப் பரப்போ, மிருதுவாகவும் துகள்களாகவும் இருப்பதாக விவரித்தார் ஆம்ஸ்ட்ராங்.

20 நிமிஷங்களுக்குப் பிறகு ஆல்ட்ரினும் அவருடன் சென்று சேர்ந்துகொண்டு நிலவில் நடந்தார்.

நிலவுப் பயணத்தின் மூன்றாவது வீரரான மைக்கேல் காலின்ஸ், கொலம்பியா விண்கலத்தில் இருந்தவாறே 28 மணி நேரம் தகவல் தொடர்பாளராகச் செயல்பட்டதுடன் நிலவின் தரைப் பரப்பையும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.

நிலாவில் முதன்முறையாக சிறுநீர் கழித்த நபர் யார் தெரியுமா? | Apollo Mission Landing On Moon

நிலவின் கடினமான தரையில் அமெரிக்கக் கொடியை நடுவதற்கு சிரமப்பட்ட வீரர்கள், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கொடி சாய்ந்துவிடுமோ என்று பதற்றத்தில் இருந்திருக்கின்றனர்.

கிறிஸ்துவரான ஆல்ட்ரின், நிலவில் கலம் இறங்கியதும் விவிலியத்திலிருந்து சில வரிகளைக் கூறினார்.

நிலவில் முதன்முதலாகக் கால் வைத்து நடந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்தான் என்றாலும் நிலவில் சிறுநீர் கழித்தவரை யாருக்கும் தெரியாது, அவர் ஆல்ட்ரின்!

பல லட்சக்கணக்கானோர் ஒருபுறம் நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய விண்வெளிச் சிறப்பு உடைக்குள் பொருத்தப்பட்டிருந்த விசேஷ குழாய்வழியே உச்சா போனார் ஆல்ட்ரின்.

முதன்முதலாக நிலவில் மனிதர்கள் இறங்கியபோது அங்கே ஆமால்கொலைட் (மூன்று வீரர்களின் பெயர்களையும் இணைத்துச் சூட்டப்பட்ட பெயர்!) என்றொரு கனிமம் கண்டெடுத்து வரப்பட்டது.

பின்னால் பூமியில் பல்வேறு இடங்களிலும் இந்தக் கனிமம் கண்டறியப்பட்டது. நிலவில் நடந்துவிட்டு வந்த பிறகு இரு வீரர்களும் தங்கள் ஹெல்மெட்களைக் கழற்றியதும் ஒரு கடுமையான வாசனையை உணர்ந்தனர்.

நிலாவில் முதன்முறையாக சிறுநீர் கழித்த நபர் யார் தெரியுமா? | Apollo Mission Landing On Moon

இதைத் தீப்பற்றியெரிந்த இடத்தில் நீரூற்றி அணைக்கப்பட்ட சாம்பலின் வாசனையைப் போலிருப்பதாக நீல் ஆம்ஸ்ட்ராங் குறிப்பிட்டார்.

ஆல்ட்ரினோ பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தின் வாசனை என்றார். உள்ளபடியே அந்த வாசனையோ அவர்களின் காலணிகளில் ஒட்டிக்கொண்டுவந்த நிலவின் மண்வாசனை!

பூமிக்குத் திரும்பும் கலனுக்கு வந்ததும் தெரியாத்தனமாக எந்திரங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச்சை உடைத்துவிட்டார் ஆல்ட்ரின்.

முதலில் கவலைப்பட்டாலும் பின்னர் ஒரு பால்-பாயிண்ட் பேனாவின் உதவியுடன் இயக்கிவிட்டனர்!

1981 வரையிலும், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் மிக அதிக அளவிலானோர் - 60 கோடி பேர் - பார்த்தது, நிலவில் அப்போலோ 11 விண்வெளிப் பயணிகள் இறங்கியதைத்தான்!

இந்த உலக சாதனையை, 1981-ல், 75 கோடி பேர் பார்த்த வேல்ஸ் இளவரசர் - டயானா திருமணக் காட்சி முறியடித்தது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US