திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் டாடா பட நடிகை... குவியும் லைக்குகள்
நடிகை அபர்ணா தாஸ் பட்டு சேலையில் ரசிகர்கள்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அபர்ணா தாஸ்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்பட்டது.
ஆனால் அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
அபர்ணா தாஸின் காதலர் தீபக் பரம்போல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் அபர்ணா தாஸ் தற்பொது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |