ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!
actress anupama open talk : காதல் என்பது மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த உறவாக இருக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் அதே காதல் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய வலியை ஏற்படுத்திவிடுகின்றது என உருக்கமான தொனியில் தனது கடந்தகால காதல் அனுபவத்தை நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த காதல் உறவில் தான் சந்தித்த பல்வேறு இன்னல்களையும், அதிலிருந்து இறுதியில் எப்படி வெளியேறினார் என்பதையும் சமீபத்திய பேட்டியொன்றில் அவர் மனம் திறந்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
மலையாள திரையுலகில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
தமிழில் ‘கொடி’, ‘டிராகன்’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசிய அனுபமா, அந்த உறவில் தான் அனுபவித்த மனவேதனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
காதல் வாழ்க்கை குறித்து ஓபன் டாக்
குறிப்பாக, தனது காதலர் தன்னை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, காதலனின் குடும்பத்தினர் தன்னுடன் பழகத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் செய்யுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் அனுபமா கூறியுள்ளார்.
ஆனால், தனது காதலர் தன்னைவிட வயதில் குறைந்தவர் என்பதால் அந்த நிச்சயதார்த்தத்தை தவிர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் காதல் உறவு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் தனது காதலரின் குணாதிசயங்களைப் பற்றி தனக்கு பல விஷயங்கள் தெரியவந்ததாக அனுபமா தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிறரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை அவரிடம் இருந்ததை உணர்ந்ததாகவும், அதன் பின்னரே அவரிடம் இருந்து விலக முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
தனது இரண்டு ஆண்டு காதல் வாழ்க்கையை விவரித்த அனுபமா, காதலரின் குணம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார். ஒரு நாள் அவர் அந்நியன் திரைப்படத்தில் வரும் ரெமோ கதாபாத்திரத்தைப் போல மிகவும் அன்பானவராக இருப்பார். அப்போது, இப்படியொரு காதலர் நமக்கு கிடைத்திருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால், மறுநாளே அதற்கு நேர்மாறாக, தன்னுடன் எந்தத் தொடர்பும் இல்லாத அந்நியன் போல நடந்துகொள்வார் என்றும், அதற்கு அடுத்த நாள் குழந்தையைப் போல தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு காதலரின் அணுகுமுறை தொடர்ந்து மாறி மாறி வந்ததாகவும், இந்தச் சூழ்நிலையைத் தான் சுமார் இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, தனது காதல் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதன் மூலம் தனக்கு ஒரு விதமான விடுதலை கிடைத்திருப்பதாகவும் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், தற்போது தனது காதல் அனுபவம் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எனினும், குறித்த பேட்டியில் தனது முன்னாள் காதலர் யார் என்பதை அனுபமா வெளிப்படுத்தவில்லை. காதல் உறவில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை மட்டுமே அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்த்கது.
திரையுலகில் எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றும் அனுபமா பரமேஸ்வரன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு மன உளைச்சலை சந்தித்ததாக வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.