என்கிட்ட அந்த வீடியோ எதிர்பார்க்காதீங்க.. அனிதா சம்பத்தின் ஓபன் டாக்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில ப்ரோகிராம்களில் பங்கேற்று வருகிறார்.
இணையத்தளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். மேலும், சொந்தமாக ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
அந்த சேனலில் அவரை பற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அந்த சேனலில் அவரை பற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிகம் பேர் Prank வீடியோ போடுங்க என தான் கேட்டிருக்கிறார்கள், prank செய்வது தவறு என நாங்கள் நினைக்கிறோம். ஒருவரை அழ வைத்துவிட்டு prank என இறுதியில் சொல்வது தவறு எனவும் கூறி உள்ளனர்.
மேலும், prank வீடியோ அனிதா சம்பத் சேனலில் வரும் என எதிர்பார்க்காதீங்க என தெரிவித்தார். பின்னர், ஹோம் டூர், பாத்ரூம் டூர் போன்ற வீடியோக்கள் போடுங்க என ரசிகர்கள் கேட்டிருப்பது பற்றி பேசிய அனிதா சம்பத், எங்க வீடு அவ்ளோ பெருசு இல்லை. சொந்தமாக பெரிய வீடு வாங்க வேண்டும் என ஆசை இருக்கிறது.
அது நடந்தபின் வீடியோ வெளியிடுகிறோம். பாத்ரூம் டூர் வீடியோ போடும் அளவுக்கு அங்கு எதுவும் இல்லை என்றும் அனிதா கூறி உள்ளார்.