கணவருக்காக பிக்பாஸ் அனிதா சம்பத் வெளியிட்ட உருக்கமான பதிவு
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அனிதா சம்பத்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து வெற்றி பெற்றார்.
இதுமட்டுமின்றி, இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கத்தில சுறுசுறுப்பாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இவரது திருமண நாளின் போது, “முக்கியமான நாளில் ஒன்றாக இருக்க முடியாமல் வேற நாட்டில் அமர்ந்து இதை எழுதுவேன் என்று நினைத்து கூட பார்க்கல என பதிவிட்டுள்ளார்.
மேலும், கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எப்பவும் சொல்றமாதிரி, உன்ன பார்க்கமலே போயிருந்தா நான் என்ன ஆகிருப்பேன் பப்பு என உருகி உருகி பதிவிட்டு இருக்கிறார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் நல்ல கணவர் கிடைப்பது வரம் என்பது போல், நல்ல மனைவி அமைவதும் தவம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.