சிங்கள பாடலை Copy அடித்த அனிருத்- குறும்படம் போட்டு வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
இசையமைப்பாளர் அனிருத் சிங்கள பாடலில் உள்ள டியூனை Chuttamalle.. என்ற பாடலுக்கு போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
அனிருத்
தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளராக அனிருத் பார்க்கப்படுகிறார்.
அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அதே சமயம் இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விளாசும் நெட்டிசன்கள்
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் “தேவரா” என்ற படத்திற்கும் அனிருத் இசையமைத்து உள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
தேவரா படத்தில் வரும் Chuttamalle பாடலுக்கான டியூனை Manike Mage Hithe என்ற சிங்கள பாடலில் இருந்து காப்பி அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
“அனிருத் காப்பி அடித்திருக்கிறார்” என நெட்டிசன்கள் சமூகவலைத்தளப்பக்கங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ivan innum thirundhala maamaa pic.twitter.com/vNMvMJwtb3
— lovedalecowball (@saambumavane) August 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |