6 வயது பெரிய பெண்னை காதலித்த அனிருத்...ஆண்ட்ரியாவோட பிரேக்கப்பிற்கு என்ன காரணம் தெரியுமா?
பாடகி ஆண்ட்ரியாவுடனான காதல் குறித்து பேட்டி ஒன்றில் அனிருத் வெளிப்படையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளம் இசையமைப்பாளரான அனிருத், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஆண்ட்ரியா குறித்து அனிருத் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத்திடம் அவரது காதல் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் காதலித்த பெண் என்னுடன் 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததால், எங்களுக்குள் செட்டாகவில்லை என்று தெரிவித்தார்.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022
மேலும் காதலிக்கும் போது, அந்த பெண்ணுக்கு 25 வயது என்றும் தனக்கு 19 வயதே இருந்ததாகவும் அனிருத் கூறியுள்ளார்.
ஆண்ட்ரியாவின் பெயரை சொல்லாமல் பேசிய அனிருத், அவருடைய பெயரை சொல்ல முடியுமா எனக் கேட்க ஆண்ட்ரியா என தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.