அனிருத் முன் பாட்டு பாடி அசத்திய குட்டி ரசிகர் - வைரலாகும் வீடியோ!
இசையமைப்பாளர் அனிருத் முன் அவரை சந்தித்த குட்டி ரசிகர் பாட்டு பாடி அசத்திய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்குடைய குரலுக்கும், இசைக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.
இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது. இதையடுடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினி, கமல் என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதால் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார் அனிருத். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

அனிருத் முன் பாட்டு பாடி அசத்திய குட்டி ரசிகர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், தமிழ் சினிமா பிரபல இசையமைப்பாளரை சந்தித்த அவரது குட்டி ரசிகர், அவர் முன் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் பாடல் ஒன்றை அவரிடம் பாடி காட்டி அசத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
A Small Kid Singing " LEO BLOODY SWEET TITLE TRACK " Infront of the Man Himself @anirudhofficial ?? #BloodySweet #LeoFilm #OnceUponATimeTourUSA @Anirudh_FP @actorvijay @Jagadishbliss pic.twitter.com/i0tzDAJeFt
— Arun Vijay (@AVinthehousee) April 5, 2023