கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம் : புகைப்படங்கள் இதோ!
anirudh - kavyamaran wedding in greece : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும், இளம் தலைமுறையின் விருப்பத்துக்குரிய இசைக் கலைஞராகவும் வலம் வரும் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்
இந்த நட்சத்திரத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல், திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அழைப்பாளர்கள் முன்னிலையில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. பிரபலங்களின் வருகை, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் என இந்தத் திருமணம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணத்தைத் தொடர்ந்து, அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, "My once in a lifetime, for a lifetime 11.11" என நெகிழ்ச்சியான வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அழகான தருணம், வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் என்பதையே அவரது பதிவு உணர்த்துகிறது.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதனால் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் புதுமணத் தம்பதியருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |