இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறியத்தரும் சக்தி கொண்ட மிருகங்கள்- யானைகளும் இருக்கா?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது இயற்கையும் பல அதிசயங்கள் நிறைந்ததாகும். இதுவரையில் உலகில் நடந்த பல பேரழிவுகள் இயற்கை சீற்றங்களால் தான் ஏற்பட்டுள்ளன.
இவ்வளவு அழிவுகளை நொடிப்பொழுதில் ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகளைத் தெரியப்படுத்தும். இயற்கைக்கும் ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு கொண்டது.
அதற்கு செயற்கைக்கோள்கள் அல்லது நில அதிர்வு வரைப்படங்கள் அவசியம் இல்லை. பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் ஒரு இயற்கை பேரழிவை சந்திப்பதற்குப் முன்னர் விலங்குகள் அதனை தெரிந்து கொண்டு இடம்பெயர்ந்து விடும்.
பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் புயல்கள் வரும் பொழுது அது மனிதர்களுக்கு தெரியும் முன்னர் விலங்குகள் கண்டுபிடித்து விடுகின்றன.
அந்த வகையில் இயற்கை அழிவுகள் வர முன்னர் அதனை தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த விலங்குகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அழிவுகள் முன்பே அறிந்து கொள்ளும் விலங்குகள்
1. பூகம்பங்கள், புயல்கள் மற்றும் பிற பேரழிவுகள் வரும் முன்னர் நாய்களுக்கு அது தெரிந்து விடும். ஏனெனின் நாய்களிடம் உணர்திறன் வாய்ந்த காதுகள் உள்ளன. இது நில அதிர்வு நடவடிக்கைகளிலிருந்து குறைந்த அதிர்வெண் ஒலிகளையும், அதிர்வுகளையும் உணர்ந்து கொள்ளும்.
2. இயற்கை பேரழிவுகள் வரும் பொழுது அதனை மனிதர்களுக்கு முன்னரே தெரிந்து கொள்ளும் ஆற்றல் யானைகளுக்கு உள்ளது. உதாரணமாக பூகம்பங்கள் மற்றும் சுனாமி, இவை நில அதிர்வு நிகழ்வுகளுக்கு முன்பு பூமியின் வழியாக பயணிக்கும் இன்ஃப்ராசவுண்ட் எனப்படும் குறைந்த அதிர்வெண் அதிர்வுகளை உணரும் ஆற்றல் கொண்டன.
3. ஓர்ஃபிஷ் போன்ற ஆழ்கடலில் வாழும் மீன்கள், பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு இடம்பெயர்ந்து விடும். ஜப்பானிய கலாச்சாரத்தின்படி, ஓர்ஃபிஷ்கள் பூகம்பங்களின் சகுனமாகக் கருதப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட “டோஹோகு” பூகம்பத்திற்கு முன்னர் பல முறை காணப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
4. தேரைகள் பூகம்பங்கள் ஏற்படுவதற்கு முன்னரே அதனை அறியும் ஆற்றல் கொண்டவை. கடந்த 2009 ஆம் ஆண்டில், 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இத்தாலியின் எல்'அக்விலா அருகே பொதுவான தேரைகள் இனப்பெருக்க இடத்தை விட்டு வெளியேறியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5. இயற்கை சீற்றங்களை அறியும் ஆற்றல் பூனைகளுக்கு உள்ளது. அதாவது பூனையொன்றிற்கு பூகம்பங்களை முன்கூட்டியே உணரும் திறன் உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் இயற்கை அனர்த்தம் வரும் சில மணி நேரத்திற்கு முன்னர் பதற்றமாக இருப்பதை அவதானிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
